மொபைலில் இலவசமாக உங்கள் Facebook நண்பர்களுடன் பேச…


நீங்கள் உங்களுடைய பேஸ்புக் நண்பர்களை அவர்களின் தொலைபேசி எண் இல்லாமலேயே அழைக்கவேண்டுமா? ஆமாம் iPhone அல்லது ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தால் வோனேஜ்(Vonage) என்றழைக்கப்படும் சேவை இலவசமாக இதனை அனுமதிக்கிறது…

உங்கள் பேஸ்புக் நண்பர்கள் உலகில் உள்ள எந்த நாட்டில் இருந்தாலும் வோனேஜ் மொபைல் அப்ளிகேசன் பார் பேஸ்புக் (Vonage Mobile application for Facebook) எளிதாக தொடர்புகொள்ளலாம். ஆனால் உங்கள் நண்பரும் இந்த குறிப்பிட்ட அப்ளிகேசன் செயல்பாடுடைய iPhone அல்லது Android சாதனம் வைத்திருக்க வேண்டும்.

இந்த அப்ளிகேசன் 48 நாடுகளில் Android போன்களிலும், 87 நாடுகளில் iPhone அல்லது Ipod Touch லும் கிடைக்கிறது. விரைவில் இந்த அப்ளிகேசன் iPad லும் வர இருக்கிறது.

iTunes store மற்றும் Android Market களில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேசன் Vonage Facebook fan Page லும் கிடைக்கிறது.தற்போது, WI-FI மற்றும் 3G/4G தொழில்நுட்பம் உள்ள பெரும்பாலான நாடுகளிலும் இந்த Vonage Mobile application இயங்குகிறது.

தற்போது அது எப்படி இயங்குகிறது என்பதை பார்ப்போம்:

1. நீங்கள் தரவிறக்கம் செய்த பிறகு, உங்களது பேஸ்புக் பயனர் பெயர்(Username) மற்றும் கடவுச்சொல்(Password) முதல் முறை உபயோகிக்கும் போது கொடுக்க வேண்டும்.

2. இப்பொழுது இந்த மென்பொருளானது உங்கள் பேஸ்புக் நண்பர்களை இரண்டு குழுக்களாக பிரித்து காண்பிக்கும். முதல் குழுவில் இந்த Vonage Mobile App சேவையினை உடைய இலவசமாக அழைக்கும் வசதியை பெற்றவர்களும், இரண்டாவது குழுவில் Instant message சேவையினை உடையவர்களும் காண்பிக்கப்படும்.

vonage-mobile-application2

3. இனி இங்கே உங்கள் நண்பர்களின் பெயரை தொட்டவுடன் இலவசமாக இணைப்பை பெறலாம். நீங்கள் call செய்தவுடன் உங்கள் நண்பரின் முகப்பு படமும் அவரது status messageம் திரையில் காண்பிக்கப்படும். நீங்கள் இந்த அப்ளிகேஷனை close செய்தாலும் Incoming call ring வந்தால் உங்களது மொபைல் ரிங் கொடுக்கும்.

விளக்க காணொளி:

உங்கள் ஐபோனில் உங்கள் பேஸ்புக் நண்பர்களை தொடர்பு கொள்ள ரெடியாகிட்டிங்களா?

தரவிறக்கம் செய்துகொள்ளும் இணைப்புகள்:

Advertisements
This entry was posted in அலைபேசி, தகவல் and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to மொபைலில் இலவசமாக உங்கள் Facebook நண்பர்களுடன் பேச…

  1. muthuvel சொல்கிறார்:

    well done sir, very super post..

  2. saravanan-kazakhstan சொல்கிறார்:

    This is Very Usefull Post.
    Thank you

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s