அதிவேகமாக வெப்சைட் லோட் ஆக கூகுல் அறிமுகப்படுத்தும் புதிய இமேஜ் பார்மெட்


google-chrome-logoநாம் சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் நம் கணினியில் லோட்(load) ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப்பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் (load) ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே. அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ் களின் file size என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம், இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட் ஆவதற்கு வசதியாக கூகுல் புது வகையான இமேஜ் பார்மேட்டை அறிமுகபடுத்துகிறது. அதாவது படங்களுக்கென ஏற்கனவே நாம் பயன்படுத்தும் பலதரப்பட்ட இமேஜ் பார்மேட்களில் Jpeg பார்மெட் தான் இதுவரைக்காலமும் மிக குறைந்த file சைசில் தரமான புகைப்படங்களை வழங்கி வந்தது. இப்பொழுது அதைவிடவும் மிக மிகக் குறைவான file சைசில் அதே மாறாத தரத்துடன் புதியவகையிலான இமேஜ் பார்மேட்டை WebP (வெப்பி) என்ற பெயரில் கூகுல் அறிமுகப்படுத்துகிறது. இந்த WebP பார்மேட்டானது Jpeg இமேஜைக் காட்டிலும் சராசரியாக 40% குறைவான file சைசில் கிடைக்கிறதாம்.

இதுகுறித்து கூகுளின் Product Manager திரு ரிச்சர்ட் ராப்பட் கூறுகையில் ” தற்போது இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் இமேஜ் பார்மேட்கள் அனைத்தும் பத்தாண்டுகளுக்கு முன்னர் அன்றைய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்க்கப்பட்டவை. ஆகவே கூகுளின் சில பொறியியலாளர்கள் Jpeg போன்ற அதிவேகமாக லோட் ஆகும் குறைந்த file சைசில் மாறாத தரம் பெற்ற இமேஜ் பார்மேட்டினை உருவாக்க முடிவெடுத்தார்கள். இதன் ஒரு பகுதியாக புதிய இமேஜ் பார்மேட்டின் முன்மாதிரி வெளியிடுகிறோம். ” என்கிறார்.

கூகுல் நிறுவனம் இந்த புதிய வகை இமேஜ் பார்மெட் அனைத்து வகை இணைய உலாவிகளிலும் (Internet Browsers) தெரியும் வகையில் உலாவிகளின் தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இனிமே வெப்சைட் லோட் ஆக லேட் ஆகுதுன்னு கவலை இல்லீங்க..

உதாரணங்கள்:

JPEG WEBP
136780 bytes 122260 bytes (10.6%)
Image URL: http://en.wikipedia.org/wiki/File:%22Forever_Tall%22_CITYarts,_Inc._mural.jpg
Image Title: “Forever Tall CITYarts, Inc. mural at Cooper Square in the East Village of Manhattan, 2001
Image Author: Muralizer
JPEG WEBP
46768 bytes 36154 bytes (22.69%)
Image URL: http://en.wikipedia.org/wiki/File:003lesbar.jpg
JPEG WEBP
936605 bytes 581514 (37.91%)
Image URL: http://en.wikipedia.org/wiki/File:09-Station_Sign.JPG
Image Title: Aylesham rail station sign
Image Author: Atomicdanny
JPEG WEBP
1867802 bytes 1234926 (31.74%)
Image URL: http://en.wikipedia.org/wiki/File:12th_street_tunnel.jpg
Image Author: Ser Amantio di Nicolao
JPEG WEBP
3587691 bytes 3115308 (13.17%)
Image URL: http://en.wikipedia.org/wiki/File:15_yas_violet_overview.jpg
Image Title: YAS Marina Hotel, Architecture Asymptote, Lighting Design Arup, photo Rogier van der Heide
Image Author: Rogier van der Heide
JPEG WEBP
1175642 bytes 864134 bytes (26.50%)
Image URL: http://en.wikipedia.org/wiki/File:2008_Rhinehart_Music_Center.jpg
Image Title: The long-awaited John and Ruth Rhinehart Music Center, IPFW’s newest campus addition, opened in fall 2007.
Image Author: Twzink
JPEG WEBP
1093968 bytes 368168 (66.35%)
Image URL: http://en.wikipedia.org/wiki/File:2004_Theodore_Too_%26_Queen_Mary_2_in_Halifax.jpg
Image Title: Boat “Theodore Too” sailing next to boat “Queen Mary 2” in the port of Halifax, Nova Scotia, Canada.
Image Author: Emmanuelm
Advertisements
This entry was posted in தகவல் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to அதிவேகமாக வெப்சைட் லோட் ஆக கூகுல் அறிமுகப்படுத்தும் புதிய இமேஜ் பார்மெட்

 1. asfer சொல்கிறார்:

  நல்ல செய்தியை சொன்னீர்கள்.. நன்றி நண்பா

 2. arun சொல்கிறார்:

  pless send your new products

 3. Prabaharan சொல்கிறார்:

  பாஸ் தினமலர் இதையும் காப்பி பண்ணிட்டாங்க போல?

  • thozhilnutpam சொல்கிறார்:

   அப்படியா? நான் பார்க்கவில்லையே நண்பரே! எனினும் தொழில்நுட்ப செய்திகள் என்னும்போது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s