ஆஹா..அசத்தும் Google TV-இணையத்தை இணைக்கும் சிறப்பம்சங்கள்


இணைய உலகின் கதாநாயகன் கூகுல் தடம்பதிக்கும் துறைகள் அனைத்திலும் வெற்றி நாயகனாக வலம் வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் தற்போது கூகுல் நிறுவனத்தின் படைப்பான Google TV அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.. சரி அப்படி என்னதான் அதில் விஷேசம் என்றால் ஒன்றிரண்டல்ல… இணையத்தையும் தொலைக்காட்சியையும் ஒன்றிணைக்கும் புதுமைகளில் எளிமையான வழிமுறைகள். தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்க்கும் அதே நேரத்தில் இணையத்திலும் நாம் நம்முடைய தேடல்களை தொடரலாம்..மேலும் என்னென்ன சிறப்பம்சங்கள் என்பதை பற்றியதுதான் இன்றைய பதிவு:

  • நமக்கு தேவையான ப்ரோக்ராம்களை தட்டச்சு செய்தாலே போதுமானது.  டிவி, இணையம், அப்ளிகேசன் – மூன்றிலிருந்தும் நமக்கு தேவையான தகவலை ஒரே கிளிக்கில் தேடிக்கொள்ளலாம்.

search-googletv

  • கூகுல் குரோம் மற்றும் அடோப் ப்ளாஷ் பிளேயருடன் இணைந்து கூகுல் டிவி,  இணையத்தில் உள்ள அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் சேவையினை வழங்குகிறது. நமக்கு பிடித்தமான இணைய காணொளிகள், படங்கள், விளையாட்டுக்கள், நண்பர்களுடன் சாட் போன்ற அனைத்து ஆன்லைன் ப்ரொக்ராம்களும் உபயோகிக்கும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இவை தவிர  யூடியுப் , டிவிட்டர், ஃபிளிக்கர் ,விக்கீப்பிடியா, நெட்பிளிக்ஸ் மற்றும் சிலவகை அப்ளிகேசன்களையும் வழங்குகிறது.

features_thousandsofapps

  • நம்முடைய iPhone அல்லது Android Phone போன்ற மொபைல் போன்களை கூகுல் டிவியின் ரிமோட் ஆக உபயோகிக்கலாம். மேலும் ஒன்றிற்கும் மேற்பட்ட மொபைல்களை ஒரே டிவியின் ரிமோட் ஆக ஒரே நேரத்திலும் பயன்படுத்தலாம்.

  • நாம் மொபைலில் பார்க்கும் தளத்தை கூகுல் டிவியின் மூலம் அனைவருக்கும் பகிர முடியும்.
  • டிவி நிகழ்சிகளை பார்த்துக்கொண்டே சாட் செய்யலாம்.

  • நமக்கு பிடித்த டிவி சேனல்கள், வலைப்பக்கங்கள், அப்ளிகேசன்கள் போன்றவற்றை முகப்பு பக்கமாக (Home Page) சேமித்து வைத்துக்கொள்ளும் வசதி.

  • Youtube போன்று நமக்கு பிடித்த, தேவையான வீடியோக்களை Playlist அமைத்து சேமித்து வைத்து விரும்பிய நேரத்தில் காணலாம்.
  • நமக்கு பிடித்தமான எந்த பாடலையும், எந்நேரத்திலும் Napster மூலமாக கேட்டு மகிழலாம்.

features_listentotv

  • ஃபிளிக்கர், பிகாஸா போன்ற தளங்களில் உள்ள படங்களை டிவியில் HD தரத்துடன் பார்க்கலாம்.
விளக்க காணொளிகள்:

என்னங்க…கூகுல் டிவி வாங்க நீங்களும் தயாராகிட்டிங்க போல?

 

Advertisements
This entry was posted in இணையதளம், தகவல், தொலைக்காட்சி and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to ஆஹா..அசத்தும் Google TV-இணையத்தை இணைக்கும் சிறப்பம்சங்கள்

  1. adhithakarikalan சொல்கிறார்:

    TV with NET சூப்பர் மேட்டர்…

  2. premcs23 சொல்கிறார்:

    விளக்கம் அருமை

  3. shanthi சொல்கிறார்:

    Google rocks and you also…!

  4. ந.ர.செ. ராஜ்குமார் சொல்கிறார்:

    அறிவியல் நம் வாழ்வை அழகியல் ஆக்குகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s